Advertisment

பேனர் விவகாரம்- ஜெயகோபால் விரைவில் கைது... தமிழக அரசு உறுதி!

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ. இவர் கடந்த 12-ந்தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சட்டவிரோதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண பேனர் சரிந்து விழுந்தது.

Advertisment

இதனால் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னால் வேகமாக வந்த லாரி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 13-ந் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தபோது, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Advertisment

CHENNAI FLEX ISSUE MADRAS HIGH COURT ORDER

அதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஜெயகோபால் சட்டவிரோதமாக பேனர் வைத்த நிலையில் லாரி டிரைவர் மீதான வழக்குடன் அவரைச் சேர்த்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல் ஜெயகோபால் வெளிநாட்டுக்கு தப்பி விட்டாரா? எனவும், அவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதனையடுத்து சுபஸ்ரீ வழக்கை காவல் ஆணையர் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

subasri flex highcourt madras Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe