சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பெயர் எப்ஃஐ ஆரில் சேர்க்கப்பட்டது. தனது வீட்டு திருமணத்துக்காக பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் பெயரை காவல்துறையினர் எப்ஃஐ ஆரில் சேர்த்தனர். பேனர் வைத்தவர் பெயரை வழக்கில் ஏன் சேர்க்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து, லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற சுபஸ்ரீ உயிரிழந்தார். ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.