பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த பேரின் ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி இன்று விசாரிக்க உள்ளார். செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.