(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவுவிழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெண்கள் பாதுகாப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது என்றார்.
மேலும் பேசுகையில், எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தால் அவரது திரைப்படம் போலவே 100 நாட்கள்தான் இருக்கும் என கூறியவர்கள் தற்போது கோட்டை பக்கமே வரமுடியாத நிலையில் உள்ளனர். திரை உலகிலிருந்துஅரசியலுக்கு வந்து முதல்வரான ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்தான். அதேபோல் ஆட்சிக்கு வந்தபின் முதல்முறையாகரூ.330 கோடி விவசாய கடனை ரத்து செய்தவர் எம்.ஜி.ஆர் தான்என புகழாரம் சூட்டினார்.