இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த, பொதுமுடக்கம் முடியவிருந்த நிலையில் மேலும் 14 நாட்களுக்கு அதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வரைமுறைகள் மற்றும் தளர்வுகளுடன் இந்த பொது முடக்கம் தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸின் தாக்கம் சென்னையில் பெரிய அளவில் இருந்தது. ஆனால் தற்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் 46 கரோனா கட்டுப்பாடு பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களாக புதிதாக கரோனா தொற்று பதிவாகாத நிலையில் 46 பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.