Skip to main content

சிலம்பொலி செல்லப்பனாருக்கு நினைவுச்சின்னம் -தமிழியக்கம் விஸ்வநாதன் அறிவிப்பு

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

 


மறைந்த செந்தமிழ்ச்சான்றோர் சிலம்பொலி சு.செல்லப்பனார் அவர்களுக்கு சென்னை எத்திராஜ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் புகழஞ்சலி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட தமிழியக்க நிறுவன தலைவரும், விஐடி பல்கலைகழக வேந்தருமான விசுவநாதன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

 

v


அங்கு அவர் பேசும்போது, தமிழகத்தில் மு.வரதராசனாருக்கு ஒரு சிலை தான் உண்டு.  அதுவும் விஐடியில் தான் உள்ளது. அந்த சிலையை திறந்து வைத்தவர் சிலம்பொலி செல்லப்பனார். அவர் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்தவர். இந்த காலத்தில் திருக்குறளை வெகு சிலர் மட்டும் தான் படிக்கின்றனர். அதன்படி வாழ்பவர்கள் மிக மிக குறைவுதான், ஆனால் சிலம்பொலி செல்லப்பனார் திருக்குறளை படித்தும் அதன்படி தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவருக்கான நினைவுச்சின்னம் தமிழகத்தில் இல்லை. அவருக்கான நினைவுச்சின்னத்தை தமிழியக்கம் உருவாக்கும்.


நம் தமிழ் மக்கள் அனைவரும் தம் குழந்தைகளுக்கு தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும். அதற்காக தமிழியக்கம் சார்பில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க ஒரு புத்தகம் விரைவில் வெளியிட உள்ளோம். உலகின் மூத்த மொழி தமிழ் மொழி தான் என்று தமிழர்கள் உட்பட உலகினர் தெரிந்து கொள்ள வேண்டும். 3500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மொழிக்கு இலக்கணம் நூல் உண்டு என்றால் அது தொல்காப்பியம் தான் அப்படி சிறப்பு வாய்ந்தது தான் தமிழ் மொழி. மேலும் தமிழ் மொழி மட்டும் தான் மற்ற மொழியின் துணை  இல்லாமல் இயங்க கூடியது. நாம் அனைவரும் மற்ற மொழிகளை நேசிப்போம் தமிழ் மொழியை சுவாசிப்போம் என்றார்.


சமீபத்தில் சுவீடன், ஸ்பெயின், கிரீஸ் நாடுகளுக்கு சென்று வந்தேன் அந்த நாடுகளுக்கு உள்ள ஒரு ஒற்றுமை அந்நாட்டவர்கள் பெரும்பாலோனார் தங்கள் தாய் மொழியில் பேசுகிறார்கள், படிக்கிறார்கள். இந்தியா பண்முகம் கொண்ட நாடாக இருந்தாலும் மற்ற மொழி கலப்போடு தான் தாய் மொழியை பேசி வருகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்  அவர் அவர்கள் தங்கள் தாய் மொழியில் தான் பேச வேண்டும்.


உக்ரைன் நாடு சமீபத்தில் தங்கள் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றியது. அந்த சட்டத்தின்படி அனைத்து மட்டத்திலும் உள்ள அதிகாரிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தங்கள் தாய்மொழியான உக்ரைனியா மொழியில் தான் கண்டிப்பாக பேச வேண்டும் அல்லது அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல் கிரிமினல் குற்றமாக கருதப்படுவதாக அந்த சட்டத்தில் உள்ளது.


அது போல் தமிழியக்கம் சார்பில் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது அயல்நாட்டு விமானங்களில் தமிழ் அறிவிப்பு உள்ளது. அதுபோல உள்நாடு விமானங்களில் தமிழ் அறிவிப்பு இருக்க வேண்டும், இதை செயல்படுத்தும் வரை தமிழியக்கம் தொடர்ந்து போராடி கொண்டிருக்கும் என்றார்.

சார்ந்த செய்திகள்