Skip to main content

எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

chennai elizhagam dvac search

 

சென்னை எழிலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டட வளாகத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கு நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு பாஸ்கர் என்பவர் உதவி செயற்பொறியாளராக செயல்பட்டு வருகிறார்.

 

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய பல மணி நேரம் சோதனை நடத்தினர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் உதவி செயற்பொறியாளர் பாஸ்கரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

கையும் களவுமாக சிக்கிய சார் பதிவாளர்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
The sub registrar was caught Anti-bribery department in action

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபால கிருஷ்ணன் (வயது 65). இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாக இன்று (01.03.2024) திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள். இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் கடந்த 27 ஆம் தேதி (27.02.2024) திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் சபரி ராஜன் (வயது 41) என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார்.

அதற்கு திருவெறும்பூர் சார் பதிவாளர் சபரி ராஜன் ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் வீதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரி ராஜன் தனிநபர் சூர்யா (வயது 24) என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.