Advertisment

நடைமேடையில் ஏறிய மின்சார ரயில்!

chennai electric train incident railway officers under investigation

மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது.

ரயில்வே பணிமனையில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மின்சார ரயில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு வேகமாக வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்று விபத்துக்குள்ளானது. விபத்தில் ரயில் ஓட்டுநர் மட்டும் காயமடைந்ததாகவும், ரயிலில் யாரும் இல்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

மின்சார ரயிலில் பிரேக் சரியாக இயங்காததால் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நின்று விபத்துக்குள்ளானதாக, அங்கிருந்தவர்கள் கூறுகின்றன.

Advertisment

விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே துறையின் உயரதிகாரிகள், ரயில்வே காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் புறநகர் ரயில் சேவைப் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இன்று விடுமுறை தினம் என்பதால், ரயிலில் யாரும் பயணம் செய்யவில்லை; ரயில் நிலையத்திலும் கூட்டம் குறைவாக இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

incident Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe