சென்னையில் கரும்பு விவசாயிகள் சார்பில் நடைபெற்ற பேரணி (படங்கள்)

கரும்பு விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி இன்று (17.02.2023) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்றுதலைமைச் செயலகத்தைமுற்றுகையிடும்பேரணிநடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயை மாநில அரசு எஸ்.ஏ.பி.விலையாக நிர்ணயம் செய்து வழங்கக் கோரியும், தஞ்சை ஆரூரான் சர்க்கரை ஆலை பெற்ற கரும்பு விவசாயிகள் மீதுள்ள வங்கிக் கடனை ஆலைப் பெயரில் மாற்றக் கோரியும்இந்தப் பேரணியில்கலந்துகொண்ட விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் பேரணியில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். கரும்பு விவசாயிகளின் பேரணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Chennai Egmore Farmers sugarcane tamilnadu goverment
இதையும் படியுங்கள்
Subscribe