Advertisment

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்துவந்தது.

சென்னை அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. மேலும், எழும்பூர், புரசைவாக்கம், ஈ.வே.ரா சாலை ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்தனர். ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான சாலைகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் மழை வெள்ளத்தால் சரிந்து விழுந்தன.