அடுத்த ஆண்டுக்குள் திமுகவின் உட்கட்சி தேர்தல்!

திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (10/11/2019) காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதில் பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

CHENNAI DMK PARTY GENERAL MEETING TAKE SOME DECISION

அதன் பிறகு மறைந்த திமுக உறுப்பினர்களுக்கும், சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ, ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம். அதனை தொடர்ந்து பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரை அதே பொறுப்பில் திமுக நிர்வாகிகள் நீடிப்பர் என்று தீர்மானம். அடுத்த ஆண்டுக்குள் திமுகவின் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது என்று பொதுக்குழுவில் தீர்மானம்.

CHENNAI DMK PARTY GENERAL MEETING TAKE SOME DECISION

மேலும் திருநங்கைகளை திமுகவில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கட்சியில் உள்ள சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இணையதளம் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம். வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம். வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைத்து தீர்மானம். அடுத்த ஆண்டுக்குள் திமுகவின் அமைப்பு தேர்தல் நடத்தி முடிப்பது என தீர்மானம், திமுக மருத்துவர் அணி என்பது மருத்துவ அணி என மாற்றி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Chennai decision DMK PARTY GENERAL MEETING
இதையும் படியுங்கள்
Subscribe