Advertisment

திமுக இளைஞரணியின் உறுப்பினர் சேர்க்கை துவக்கி வைக்கிறார்- உதயநிதி! 

தி.மு.க இளைஞர் அணியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நாளை (14/09/2019) சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Advertisment

முகாமை தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பு வளாகத்தில் தொடங்கி வைக்கிறார்.அதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை தேரடித் தெருவில் காலை 10.30 மணிக்கு, இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு படிவத்தில், புதிதாக இணையும் இளைஞர்களின் பெயர்களை எழுதி முகாமை தொடங்கி வைக்கிறார் உதயநிதி.

Advertisment

CHENNAI DMK member initiates CAMP DMK UDHAYANIDHI STALIN START

பிறகு, தி.மு.க இளைஞர் அணியின் தலைமையகமான அண்ணா சாலை அன்பகம், ராயபுரம் அறிவகம், முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லம், திமுக தலைமையகமான அறிவாலயம், ஆழ்வார்பேட்டையில் உள்ள கலைஞரின் இல்லம் ஆகிய இடங்களில் நடைபெறும் முகாம்களையும் பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, இளைஞரணியினர் பெருமளவில் திரள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

dmk udhayanidhi stalin Chennai camp dmk member Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe