Advertisment

chennai district police commissioner maheshkumar aggarwal pressmeet

Advertisment

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று (07/04/2021) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நான்கு மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தேர்தலன்று விதிமீறல் தொடர்பாக 10 வழக்குகள் பதிவாகியுள்ளன" என்றார்.