தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் கடந்த 2ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், இன்று (4ஆம் தேதி) மேயர், துணை மேயர், நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்று அனைத்து பொறுப்புகளுக்கும் பதவியேற்பு முடிவடைந்தது. இந்நிலையில், சென்னை துணை மேயர் சைதை மகேஷ்குமார், இன்று காலை சைதாப்பேட்டையில் உள்ள நல்லாங்கால்வாய் பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
களத்தில் இறங்கிய சென்னை துணை மேயர்! (படங்கள்)
Advertisment