Advertisment

சென்னை தினம்; புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர்

Chennai Day Chief Minister inaugurated the photo exhibition

வருடந்தோறும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி 'சென்னை தினம்' கடைப்பிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 384வது சென்னை தினமாகும். இதையொட்டி தமிழக அரசு சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் இந்து குழுமம் சார்பில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ‘அக்கம் பக்கம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சியைத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை முதல்வர் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் சேகர் பாபு, மா. சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, சென்னை மேயர் பிரியா ராஜன், மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் எனப் பலரும் உடன் இருந்தனர்.

Advertisment

இந்த கண்காட்சியில் சென்னையின் பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், நிகழ்வுகள் என கருப்பு வெள்ளை புகைப்படங்களும், இந்து குழுமம் சார்பில் சென்னையின் வரலாற்று ஆவண புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

exhibition
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe