Advertisment

மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தை... அடித்துக் கொன்ற மனைவி!

chennai daughter incident husband and wife police investigation

மதுபோதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை மனைவி சுத்தியலால் அடித்துக் கொலை செய்ய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னையில் மதுபோதையில் இருந்த பிரதீப் என்பவர் தனது வீட்டில் இருந்த மகளிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்றுள்ளார். அப்போது, அதனை தாய் தடுக்க முயன்ற போது ஏற்பட்ட கைக்கலப்பில், அவர் தனது கணவரைச் சுத்தியலால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அத்துடன், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302- ன் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரதீப்பின் மனைவி மற்றும் மகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், பிரதீப் தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தும் இறப்பு நிகழ்ந்த வழக்காக மாற்றியுள்ளனர். அத்துடன், வழக்கில் இருந்து அப்பெண்ணை விடுவிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Chennai incident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe