
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமைக்குஉள்ளாக்கிய தந்தைக்கு சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் தந்தைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது 7 வயதிலிருந்து 16 வயது வரை தந்தை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகப் புகாரளித்திருந்தார். சைல்டு லைன் மூலமாக அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுமியின் தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்தது. அதில்சிறுமியின் தந்தை7 வயதிலிருந்து 16 வயது வரை அவரை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில் அதனை கலைக்க தாய் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் தந்தை, தாய் செய்த தவறுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் தந்தைக்கு மரண தண்டனையும், உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)