Advertisment

 புதுமண தம்பதி; தேனிலவு சென்ற இடத்தில் ஏற்பட்ட சோகம்!

Chennai couple drowned in sea water in Indonesia

Advertisment

சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும்பூந்தமல்லி சென்னீர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் விபூஷ்னியாவிற்கும் கடந்த 1 ஆம் தேதி மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் திருமணம் முடிந்த கையோடு இந்தோனேசியாவிற்குத் தேனிலவு சென்றனர்.அங்கு பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது இருவரும் படகிலிருந்து நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சிகளில் இறங்கினர். ஆனால் லோகேஸ்வரன் மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். விபூஷ்னியாவை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதன்மூலம் தமிழக அரசுக்கும்அவர்களது உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 10 நாட்கள் கூட முடியாத நிலையில் புதுமணத்தம்பதிகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai couple Indonesia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe