Advertisment

தீபாவளி நாளன்று இறைச்சிக் கடைகளுக்குத் தடையா?

chennai corporation

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அதற்கான கொண்டாட்டத்திற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். தங்களுக்குத் தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காகக் கடைவீதிகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் பொழுது கரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்த நிலையில், இந்த முறை பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

ஆண்டு தோறும் மஹாவீர் ஜெயந்தி மற்றும் நினைவு நாளன்று இறைச்சிக் கடைகள் செயல்படத்தடை விதிக்கப்படும். இந்நிலையில் வரும் நவம்பர் 4-ஆம் தேதி மஹாவீர் நினைவு நாள் வரஇருப்பதால் இறைச்சிக் கடைகளுக்குச் சென்னை மாநகராட்சியில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

Advertisment

தீபாவளி பண்டிகை அன்று மகாவீர் நினைவு நாள் வரை இருப்பதால் அந்த நாளில் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று முடிவெடுக்கப்படுமெனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

Chennai diwali mahavir statue
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe