ராயபுரம் மண்டலத்தில் 1,272 பேருக்கு கரோனா!

chennai corporation zones coronavirus

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று (18/05/2020) இரவு 06.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4,406 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 81 பேர் உயிரிழந்தனர். குறிப்பாகச் சென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எந்தெந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

chennai

அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,077, திரு.வி.க.நகரில் 835, திருவொற்றியூர் 161, மாதவரம் 133, தண்டையார்பேட்டை 610, அம்பத்தூர் 321, தேனாம்பேட்டை 786, வளசரவாக்கம் 532, அண்ணாநகர் 586, அடையாறு 391, பெருங்குடி 92, சோழிங்கநல்லூரில் 101, ஆலந்தூர் 84, மணலி 93 மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 43 பேர் என மொத்தம் 7,117 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1,622 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 56 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 5,396 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chennai corporation coronavirus zones
இதையும் படியுங்கள்
Subscribe