/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EcTTyy8WoAEsViS.jpg)
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,981 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மண்டலத்தில் 7,540, திரு.வி.க.நகரில் 5,693, திருவொற்றியூர் 2,705, மாதவரம் 2,257, தண்டையார்பேட்டை 7,762, அம்பத்தூர் 3,176, தேனாம்பேட்டை 7,775, வளசரவாக்கம் 3,390, அண்ணாநகர் 7,735, அடையாறு 4,435, பெருங்குடி 1,826, சோழிங்கநல்லூரில் 1,521, ஆலந்தூர் 1,901, மணலி 1,296 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கரோனா உறுதியான 70,017 பேரில் 24,052 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 44,882 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதேபோல் சென்னையில் 15 மண்டலங்களில் 1,082 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சென்னை மாநகராட்சி, கரோனா சிகிச்சை மற்றும் வீடுகளுக்குத் திரும்பியவர்கள் குறித்து இன்று (07/07/2020) காலை 09.00 மணிக்கு வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)