Advertisment

மேயர் பதவியைப் பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம்! -சொத்துவரி விதிகள் வழக்கில் அரசியல் கட்சியினருக்கு குட்டு! 

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாத அரசியல் கட்சியினர், மேயர் பதவியைப் பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தித் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை மாநகராட்சியில், சொத்து வரி வசூல் செய்ய விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

chennai corporation properties tax chennai high court political parties

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடிவெடுத்தது ஏன்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

Advertisment

இந்த வழக்கு நேற்று (13/02/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, அரசின் அவசரப் பணியாக மாநகராட்சி ஆணையர் டில்லி செல்வதால் அவர் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை எனவும், அவர் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

இதையடுத்து, நீதிபதிகள், சொத்துவரியை உயர்த்தாமல் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தூங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டனம் தெரிவித்தனர். 20 ஆண்டுகளில் 4 முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மேயர் பதவியைப் பிடிப்பது என்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதாகக் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மாநகராட்சி பகுதியில் இல்லாதவர்கள்தான் அதிகமாக சொத்து வரி செலுத்துவதாகவும், சொத்து வரி உயர்த்தாததால்தான், வெளியூரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டுவதற்குக் காரணம் எனவும் தெரிவித்தனர். சொத்துவரி உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

chennai corporation chennai high court political parties properties tax
இதையும் படியுங்கள்
Subscribe