Advertisment

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் தஞ்சாவூர் பெண்ணுக்கு மீண்டும் கண் பார்வை கிடைக்க போகிறது!

hospital

தஞ்சாவூரை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்தார். நேற்று இரவில் அவரது கண் திடீரென பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கண் மருத்துமனைக்கு உறவினர்கள் தொடர்பு கொண்டனர். அவருக்கு உடனடியாக கண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இரவு நேரம் என்பதால் அவர்கள் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வர இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தனர்.

Advertisment

அலுவலக நேரம் முடிந்துவிட்டதால் அவர்களுக்கு அனுமதி கிடைக்காமல் இருந்தது. கண் பார்வை மீண்டும் கிடைக்குமா என்ற பதட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர். இதனையடுத்து உரிய அனுமதி காலையில்தான் கிடைக்கும் என்பதால் அதுவரையில் காத்திருக்க முடிவு செய்தனர். உரிய நேரத்தில் அவருக்கு கண் சிகிச்சை கிடைக்கும் வகையில் இரவில் மூத்த மாநகராட்சி அதிகாரி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு சென்னை வர இ-பாஸ் உடனடியாக வழங்கப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை பெற அவர் இரவில் சென்னைக்கு புறப்பட்டனர். இன்று காலை அவருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

Advertisment

Eye hospital Surgery Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe