ADVERTISEMENT

'ஒரு மாதத்துக்கு முகக்கவசம் அணிந்தால் கரோனா குறையும்'- கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி!

03:05 PM Jun 04, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


சென்னை மாநகராட்சி வளாகத்தில் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "கடுமையான கட்டுப்பாடுகளால் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தண்டையார்பேட்டை, ராயப்பேட்டை மண்டலம் சவாலான பகுதியாக இருப்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். கரோனா எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். மண்டலத்தில் ஆயிரத்துக்கு மேல் பாதிப்பு இருக்கிறது என மக்கள் அச்சப்பட வேண்டாம். ஒரு மாதத்துக்கு மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தால் கரோனா பரவலைக் குறைக்க முடியும். தெருத்தெருவாக நோய் அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. கரோனா பகுதிகளில் தடுப்பைத் தாண்டி வெளியே வந்தால் வழக்குப்பதிந்து தனிமைப்படுத்த நேரிடும்" என்றார்.

ADVERTISEMENT


அதனைத் தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னையில் கரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்தாகிறது. தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்ய முடிவு. வீட்டில் ஒருவருக்கு கரோனா என்றால் மொத்தக்குடும்ப உறுப்பினர்களும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர். கரோனா அறிகுறி இல்லாதவர்கள் 10 அல்லது 15 நாட்கள் முகாமில் தங்கவைத்து வீட்டிற்கு அனுப்பப்படுவர். சென்னையில் தனிமைப்படுத்தலுக்காக 30,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்களில் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது" என்றார்.

தனிமைப்படுத்துதல் ரத்து என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறிய நிலையில், இது குறித்து விளக்கமளித்த கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "சென்னையில் கரோனா உள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும். தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடிக்காதவர்கள் மட்டுமே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவர். விதிகளைக் கடைப்பிடிக்காமல் வீட்டில் இருந்து வெளியே செல்வோரைக் கண்டறிந்து முகாமில் தங்க வைப்போம்" என்றார்.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT