Advertisment

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குச் சென்னை மாநகராட்சி அழைப்பு!

yu

Advertisment

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பிய நிலையில், உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த நிலையில், அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களை பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டு, அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகள் போன்ற நிவாரணப் பொருட்கள் அரசு சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பொது மக்களுக்கு உதவி வருகின்றன. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முன் வர வேண்டும். ஜெ.ஜெ. உள் விளையாட்டு அரங்கத்திற்கு நேரில் கொண்டு வந்துப் பொருட்களை வழங்கலாம். https://forms.gle/NkEVTjvsH8hKTvoo9 என்ற இணையதளத்தில் தன்னார்வலர்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். இது தொடர்பான, மேலும் விவரங்களுக்கு 94450-25821 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai corporation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe