சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா பாதிப்பு?

சென்னையில் எந்தப் பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை 15 மண்டலம் வாரியாகச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் படி, சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திரு.வி.க நகர்- 22, அண்ணா நகர்- 19, கோடம்பாக்கம்- 18, தண்டையார் பேட்டை- 13, தேனாம்பேட்டை- 11, பெருங்குடி- 5, வளசரவாக்கம்- 4, திருவொற்றியூர்- 4, அடையாறு- 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

chennai corporation coronavirus place identified

மேலும் மாதவரத்தில் 3 பேருக்கும், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூரில் தலா இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மணலி மற்றும் அம்பத்தூரில் கரோனா பாதிப்பு இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாகச் சென்னையில் மட்டும் 156 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

areas Chennai coronavirus corporaion
இதையும் படியுங்கள்
Subscribe