Skip to main content

"சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்காக ரூபாய் 400 கோடி"- சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

chennai corporation commissioner press meet

 

சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

 

அப்போது அவர் பேசியது பின்வருமாறு, "சென்னையில் 90% பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்; ஆனால் இதுமட்டும் போதாது; அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கம். சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் பரிசோதனை செய்வதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்காக சுமார் ரூபாய் 400 கோடி செலவிடப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பரிசோதனைக்கு ரூபாய் 200 கோடி செலவிடப்பட்டுள்ளது. களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூபாய் 30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை மாநகராட்சியை கண்டித்து சிபிஎம் கட்சியினர் போராட்டம் (படங்கள்)

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையின்றி கர்ப்பிணி ஜனகவள்ளி (வயது 28) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்தார். சேப்பாக்கம் மசூதி தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி கனகராஜ் (வயது 37) மின்சாரம் தாக்கி கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.

 

இது தொடர்பாக அப்போதைய மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடியிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சியின் மெத்தனத்தை கண்டித்து மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று (18.05.2023) மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அப்போது பேசிய கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, "மாநகராட்சி அதிகாரிகள் கடமையைச் செய்யாததால் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது. உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். மாநகராட்சியில் நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் தர வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். 

 

 

Next Story

சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு (படங்கள்)

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன் இன்று (15.05.2023) மதியம் 12.45 மணியளவில் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரை சந்தித்து பூங்கொத்து வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.