Skip to main content

'மாஸ்க்' அணியாதவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. ஒரு பாடம்!

Published on 15/12/2020 | Edited on 15/12/2020

 

chennai corporation commissioner and health secretary press meet

 

சென்னை தண்டையார்பேட்டையில் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

 

அப்போது பேசிய சுகாதாரத்துறை செயலர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், "மாஸ்க் அணியாதவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. பாடமாக அமைந்துவிட்டது. கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளில் உணவகம் நடத்துவோருக்கும் கரோனா பரிசோதனை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அனைத்து பல்கலைக்கழகம், விடுதிகள், மேன்ஷனில் கரோனா பரிசோதனை நடத்தப்படும். தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் கேண்டீன் தொழிலாளி மூலம்தான் முதல் முதலாக கரோனா ஏற்பட்டது. கேண்டீன் தொழிலாளியிடமிருந்து மாணவர்களுக்கு கரோனா பரவியிருக்கலாம்." என்றார்.

 

அதைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், "சென்னையில் 3-ல் ஒருவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Warrant to Tirunelveli Corporation Commissioner

 

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் ரத்தினம் என்பவர் புதிய குடிநீர் இணைப்புக்கு 2 முறை திருநெல்வேலி மாநகராட்சிக்கு பணம் செலுத்தியுள்ளார். இரண்டு முறை புதிய குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நெல்லை மாநகராட்சி ஆணையர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையருக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மனுதாரர் கூடுதலாக செலுத்திய 6 ஆயிரத்து 500 ரூபாயும், மன உளைச்சலுக்காக 15 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தது.

 

பல மாதங்களாகியும் மனுதாருக்கு உரிய இழப்பீட்டு தொகையை திருநெல்வேலி மாநகராட்சி  ஒப்படைக்கவில்லை. இதனால் மனுதாரர் ரத்தினம் மீண்டும் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

 

 

 

 

Next Story

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

dindigul corporation commissioner home search

 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகின்றனர்.

 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் காஞ்சிபுரத்தில் இருந்து  பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது கொரோனா காலகட்டத்தில் கிருமிநாசினி  கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.