நாளை முதல் சென்னையிலும்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரின் சில பகுதிகள் ஆகியவற்றில்கரோனாதடுப்பு நடவடிக்கை காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றேதலைமை செயலாளர் நடத்திய ஆலோசனையில் சென்னையில் வாகன கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளை நேற்று சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.
சென்னையில் நாளுக்கு நாள் கரோனாபாதிப்பு என்பது அதிகரித்து வரும் நிலையில், படுக்கைகளுக்கானதேவைகளும் அதிகரித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள பள்ளிகளைதனிமைப்படுத்தும்வார்டுகளாககையகப்படுத்த ஒப்படைக்குமாறு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கும்சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்கும்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.