ADVERTISEMENT

எந்தெந்த இடங்களில் வணிக வளாகம், அங்காடிகளுக்கு தடை?

09:38 AM Jul 31, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் இன்றுமுதல் (31.07.2021) அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை. இன்றுமுதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 06.00 மணி வரை அங்காடிகள் செயல்பட தேவையில்லை.

வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை. புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை உள்ள வணிக வளாகம் மற்றும் அங்காடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை அங்காடிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், அங்காடிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகம், அங்காடிகள் மற்றும் ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் - காமாட்சி அம்மன் கோயில் வரை கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க. நகர் சந்திப்பு வரை கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை அங்காடிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொத்தவால்சாவடி சந்தை நாளை முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 06.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT