மறு அறிவிப்பு வரும் வரை வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் இல்லை எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே மறு ஒப்பந்தம்  மேற்கொள்ளப்படும் வரை வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களைக் கட்டணமின்றி நிறுத்திக்கொள்ளலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வாகன ஓட்டிகள் ஏதாவது புகார்கள் இருந்தால் 1913 என்ற என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.