/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/AMMA1.jpg)
சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்டட தொழிலாளர்களின் வசதிக்காக தலா ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள நடமாடும் உணவகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/AMMA2 (1).jpg)
இந்த நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று பகுதிகளில் நடமாடும் அம்மா உணவகங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/AMMA3.jpg)
கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் எளிமையாக உணவு கிடைக்க நடமாடும் அம்மா உணவகத்தை விரிவுப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)