Chennai Corporation Action

தமிழகத்தில் கரோனா பாதிப்புதொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்பொழுது தென்கொரியாவில் இருந்து கூடுதலாக ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள்தமிழகம் வந்தடைந்துள்ளது.

Advertisment

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,406 பேருக்கு கரோனாகண்டறியப்பட்டுள்ளது. இதனால் 9வது நாளாக சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரம் என்ற நிலையில் பதிவாகி வருகிறது. மேலும்இதுவரைமொத்தமாகசென்னையில் 27,398பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் மட்டும்279 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

சென்னையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.கரோனாவுக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டாலே பரிசோதனை செய்துகொண்டவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மத்திய அரசு அனுமதி பெற்ற 30 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்த முப்பது பரிசோதனை மையங்களில் கரோனாவிற்கு பரிசோதனைஎடுத்துக்கொண்டாலேபரிசோதனை செய்துகொண்டவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், வீட்டில் உள்ளவர்கள் 14 நாட்கள் .தனிமைப்படுத்தப்படுவர்என இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு தனிமைப்படுத்தபடுபவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்தபடுவார்களா அல்லது அரசு சார்பில் ஏதேனும் இடங்களில் தனிமைபடுத்தப்படுவார்களாஎன்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.