பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள எத்திராஜ் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை முதல்வர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.