சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்காக 50 துரிதச் செயல் வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கென 50 துரிதச் செயல் வாகனங்கள் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காவல்துறை உயரதிகாரிகள், பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.