Advertisment

சென்னையில் கரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி!

chennai coronavirus hospital incident

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று (31/05/2020) மட்டும் சுமார் 1,149 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 12,757 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 4 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கோயம்பேட்டைச் சேர்ந்த 69 வயதான முதியவர் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் திருவல்லிக்கேணி சாந்திதெருவைச் சேர்ந்த 42 வயதான நபர் கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 69 வயது மற்றும் 57 வயதான நபர்சிகிச்சை பலனின்றி கரோனா தொற்றால்உயிரிழந்தனர்.

Advertisment

Chennai coronavirus hospital incident patients
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe