Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர மற்ற கடைகள் எதுவும் திறந்திருக்க அனுமதி இல்லையென கூறப்பட்டுள்ளது. எனவே, நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்களை இன்றே வாங்க மக்கள் சந்தைகளில் குவிந்தனர். சென்னை பெரம்பூர், பாரதி ரோடு காய்கறி கடையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.