Advertisment

கரோனாவிலிருந்து நலமடைந்த காவலர்களை வரவேற்று சான்றிதழ் வழங்கினார் சென்னை ஆணையர்!

chennai commissioner welcomes police officers return to duty after cured from corona

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால்,இன்று (24.07.2020) காலை 11:00 மணிக்கு காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய சென்னை பெருநகர தலைமையிட இணை ஆணையாளர்C. மகேஷ்வரி இ.கா.ப., மற்றும் 69 காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களை வரவேற்று, வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Advertisment

இதுவரை சென்னை பெருநகர காவல்துறையில் மொத்தம் 1188 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிகழ்வின்போது கூடுதல் ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

குணமாகி பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு மகேஷ் குமார் அகர்வால், அறிவுரை சொல்லி கப சுர குடிநீர் வழங்கினார். மேலும் அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கும் கப சுர குடிநீர் வழங்கினார்.

police Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe