Advertisment

முக்கியக் குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்துவரும் சென்னை கமிஷ்னர்..! 

th

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள போலீஸ்கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் ஆகியோருக்கு டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநிலம் முழுவதும் காவல்நிலையங்களில் குற்றப்பதிவேட்டில் உள்ள ரவுடிகளைக் கைது செய்ய வேண்டும்’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் உள்ள முக்கியக் குற்றவாளிகளை, ரவுடிகளைக் கைது செய்யும் பணியைத் தொடங்கியுள்ளார். சென்னையைப் பொருத்தவரை ஏ+, ஏ என ரவுடிகள் பட்டியலில் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்த ரவுடிகளின் எண்ணிக்கை 373. இதில், ஏ+ பிரிவு ரவுடிகளில் 75 பேர் உள்ளனர். அதில் சிறையில் உள்ளவர்கள் மட்டும் 14 பேர். மற்றும் ஏ பிரிவு குற்றவாளிகள் 298 பேர் உள்ளனர். இதில், சிறையல் உள்ளவர்கள் 75 பேர்என பிரித்து, லிஸ்ட்களைத் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

Advertisment

தற்போது, ஏ+ ரவுடிகளில் வெளியில் இருக்கும் 61 பேர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மும்மரமாக செயல்பட்டு வருகிறது. இதில் தர்சணா, சீட்டிங் ராஜா, கல்வெட்டு ரவி, தொப்ப கணேஷ் அகியோரை அடுத்தடுத்து கைது செய்து அதிரடியைக் காட்டி வருகின்றனர். அதேபோல, சில முக்கிய ரவுடிகளை அரசியல் பிரமுகர்களே பாதுகாப்பு கொடுத்து வருவதாகவும், கைது செய்ய தடையாக இருப்பதாகவும் காவல்துறையினர்தரப்பில் பேசப்பட்டு வருகின்றன.

police Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe