Skip to main content

ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சென்னை பெண் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு  ஹெச்.ஐ.வி   ரத்தம் ஏற்றிய அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சென்னை பெண்ணுக்கும்  ஹெச்.ஐ.வி   ரத்தம் செலுத்தப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நேற்று வெளியே வந்தது.

 

mm

 

மாங்காடு பகுதியை சேர்ந்த லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனும் பெண்மணிக்கு கே.எம்.சி மருத்துவமனையில் இரத்தம் ஏற்றியபோது ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டதாகவும், ஆனால் அதனை வெளியே சொன்னால் தம்மை ஒதுக்கிவிடுவார்களோ என்று அஞ்சி வெளியே சொல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்டுள்ள விஷயம் வெளியே வந்ததை தொடர்ந்து அவரும் தன் விஷயத்தை வெளியே சொல்லியுள்ளார். அவர்  இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில், தனக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய கே.எம்.சி டீன் மற்றும் மற்ற பணியாளர்கள் மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகார் கடிதத்தின் விவரங்கள். 

 

'முதல் மாதம் எனக்கு எல்லா விதமான இரத்த பரிசோதனையும் செய்யப்பட்டது. அதன் பின்னர் 8.3.2018 அன்று மருத்துவர் என்னை மீண்டும் இரத்த பரிசோதனை செய்துவரும்படி அறிவுறுத்தி,  அவர்களே முத்துக்குமரன் மருத்துவமனையில் காசு குறைவாக இருக்கும் என்று அனுப்பினார்கள். நானும் அங்கு சென்று பரிசோதித்தேன். அப்போது, எனக்கு ஹெச்.ஐ.வி இல்லை என்று முடிவுகள் வந்தது. பின் 5.4.2018-ல் மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றேன். அவர்கள் என் உடம்பில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளது என்று 108 ஆம்புலன்ஸ் மூலம் கே.எம்.சி. அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கு மருத்துவர்கள் என் ரிப்போர்ட்களை பார்த்துவிட்டு இரத்தம் ஏற்றினார்கள். பின் 15 நாட்கள் கே.எம்.சி மருத்துவமனையில் நோயாளியாக இருந்துவிட்டு அதன் பின் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற போது  ஹீமோகுளோபின்  சரியாக உள்ளது என்று சொல்லி அனுப்பிவிட்டனர். அதன் பின் 13.8.18 அன்று ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். எடுத்தபின்னர், குழந்தையின் தலை மேலே உள்ளது உடனே கே.எம்.சி மருத்துவமனையில் அட்மிட்டாகச் சொன்னார்கள். நானும் அங்கு சென்றேன். அங்கு இரத்த பரிசோதனை செய்துவிட்டு எனக்கு ஹெச்.ஐ.வி உள்ளது என்று கூறினார்கள். அதன் பின் நானும் என் கணவரும் ஆலோசனைக்கு அழைத்து செல்லப்பட்டோம். அங்கு எங்கள் வாழ்க்கையை இப்படி செய்துவிட்டீர்கள் என்று சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டோம். அதன்பின்னர் 15.9.18 அன்று மீண்டும் கே.எம்.சி மருத்துவமனையில் குழந்தை பெறவேண்டி அனுமதிக்கப்பட்டேன். அன்றே அறுவைசிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அங்கு உள்ளவர்கள் டாக்டர்களை ஒன்றும் செய்ய முடியாது என்றும், சுகாதாரதுறைக்கு மனு அளிக்கும்படியும் சொன்னார்கள். நானும் மனு அளித்தேன். ஆனால், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய கே.எம்.சி. டீன் மீதும், மற்ற பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் அளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூ. 7,500 வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

hiv blood women high court madurai bench order

 

தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

கடந்த 2018- ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றியது தொடர்பான வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (22/12/2020) விசாரணைக்கு வந்தது. 

 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'சென்னை தாம்பரத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான மருத்துவ வசதிகள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், எச்ஐவி ரத்தம் ஏற்றியதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் ரூபாய் 7,500 வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இளநிலை உதவியாளர் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டனர். 

 

 

Next Story

எய்ட்ஸ் கட்டுப்பாடு மையத்தில் தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி? - உயர்நீதிமன்ற கிளை

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

 

mm

 

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. இரதம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு மையத்தில் முறையான கல்வி தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்று பதிலளிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜனவரி 8-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.