Advertisment

சென்னை கல்லூரிகள், விடுதிகளில் 210 பேருக்கு கரோனா!

chennai colleges and hostels coronavirus positive case raise

சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 210 பேருக்கு கரோனா உறுதியானதாக சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது.

Advertisment

'டிசம்பர் 16- ஆம் தேதி வரை சென்னையில் உள்ள கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் உள்பட 6,344 கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 210 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது; 3,773 பேருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது. இன்னும் 2,361 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.' என சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது.

Advertisment

6,344 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், அதிகபட்சமாக 13- வது மண்டலத்தில் மட்டும் 200 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் கூறுகின்றனர்.

students colleges coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe