Advertisment

சென்னையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

Chennai city bus incident at Maduravayal Bypass

சென்னை செங்குன்றத்தில் இருந்து தாம்பரத்தை நோக்கி சென்னை மாநகர பேருந்து (வழித்தட எண் : 104) ஒன்று மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக வானகரம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புறவழிச்சாலையின் மேல் இருந்து சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. அச்சமயத்தில் சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ மீது பேருந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் என்பவர் உயிரிழந்தார்.

Advertisment

இந்த விபத்தில் சிக்கிய ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் இந்த பேருந்தில் சென்ற 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த போது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

இந்த விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் தினேஷின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பேருந்து கவிழ்ந்து சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

maduravoyal bus mtc Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe