சென்னை சூளைமேடு பகுதியில் பழைய இரும்பு பொருட்கள்குடோன்ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில்தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரு தளங்கள் உள்ளன. இந்நிலையில் தான் இன்று (17.10.2024) இரவு 10 மணியளவில் யாரும் எதிர்பாராத விதமாகதீடிரெனபயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானதுகுடோனின்இரு தளங்களில் உள்ள பெரும்பாலான பகுதியில் பரவி உள்ளது.
இதனால் அந்தப் பகுதி முழுவதுமேகரும்புகைசூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து கீழ்பாக்கம் மற்றும் அசோக் நகர் உள்ளிட்டஇடங்களில் இருந்துவந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் கடந்த அரை மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் உள்ளவீடுகளில் இருந்துபொதுமக்களை காவல்துறை வெளியேற்றியுள்ளனர்.
மேலும்,குடோனில்இருந்தவர்களின் நிலைமை குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்துபோலீசாரின்முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பழைய இரும்பு பொருட்கள்குடோனில்ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.