சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு, விபத்து வழக்கில் லஞ்சம் தர மறுத்த வேன் ஓட்டுநரை அவமரியாதையாக நடத்திய சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய விபத்து புலனாய்வு அதிகாரிகள் செல்வ விநாயகம், தங்கதுரை ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (04.04.2023) சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ம.உதயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓட்டுநர்கள் போராட்டம் (படங்கள்)
Advertisment