Advertisment

மின்சாரம் தாக்கி மகன் இறந்ததற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கு!- பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனுக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை முகலிவாக்கம் தனம் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் தினா தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தெரு விளக்கிற்காக போடப்பட்ட மின் கம்பியால் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். இந்நிலையில், தனது மகன் இறப்பிற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, அவரது தந்தை கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

chennai children incidetn 50 lakh compensation his father chennai high court

அதில், மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தின் அலட்சியம் காரணமாக, தெரு விளக்கிற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் இருந்த மின் கம்பியால் மின்சாரம் தாக்கி தன் மகன் உயிரிழந்துள்ளதாகவும், இதற்காக முதலமைச்சர் அறிவித்த 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தொகை தற்போது வரை தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து 4 வார காலத்திற்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Chennai children inicdent father appeal highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe