Advertisment

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி: பொறியாளர்கள் மீது வழக்குப்பதிவு.

சென்னை முகலிவாக்கத்தில் தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி சார்பில் இதற்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு அப்பணிகள் நிறைவடையாமல் உள்ள நிலையில் பள்ளங்களை தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் மணல் நிரப்பி மூடி உள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மணல் சரிந்ததில் சாலைகளில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி நீட்டி கொண்டிருந்தது. நேற்று இரவு முகலிவாக்கம் தனம் நகரை சேர்ந்த 14 வயது சிறுவன் தீனா அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது தெரியாமல், அந்த மின்சாரம் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisment

chennai child incident engineers police filled in fir

இந்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மாநகராட்சி ஆலந்தூர் மண்டல உதவி பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

police incident child Chennai Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe