சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதி கோரி இன்று (05.04.2023) பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் துறை வாரியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.முனைவர் ஆய்வு படிப்புக்கான கட்டணம் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்.ஆய்வு மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் இரவு 9 மணிக்குள் விடுதிக்கு வர நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும். மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு வருகின்றனர்.

basic facilities Chepauk College students Madras University university of madras
இதையும் படியுங்கள்
Subscribe