கஞ்சா, மெத்தப்பட்டமை உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஒழிக்கப்படுவது தொடர்பாக காவல்துறை தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்புடைய நபர்களை போலீசார் 'ஆபரேஷன் கஞ்சா' என்ற திட்டத்தின் பெயரில் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர். கடந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மங்களூர் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட மொத்தமாக 13.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் இன்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்கத்தை சேர்ந்த நபர் ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.