Chennai is the central special committee

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது மூவாயிரத்தைக் கடந்திருக்கிறது.என்றுமே இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் இன்று 266 பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1,458 பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் கரோனாபாதிப்பு அதிகமுள்ள நாட்டின் 20 பகுதிகளுக்கு மத்திய சுகாதாரத் துறையின் சிறப்புக்குழு செல்லவிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கட்டுக்குள்வராமல்தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சிறப்புக் குழுவானது சென்னை வரை இருக்கிறது. மாநில அரசுகளுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை இந்தச் சிறப்புக்குழு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment