அண்மையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும், என்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று, பெயர்பலகை மாற்றும் பணி விறுவிறுவென நடைபெற்றது.
அண்மையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டப்படும், என்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று, பெயர்பலகை மாற்றும் பணி விறுவிறுவென நடைபெற்றது.
Next Story
சென்னை சென்ட்ரல் அருகே ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள சாணிகுளம் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் காலியாக ரயில் ஒன்று சென்று உள்ளது. அப்போது எதிர்பாராதவிதாக இந்த ரயிலின் எஞ்சின் தண்டாவளத்தில் இருந்து விலகி கீழே இறங்கியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் எஞ்சின் மற்றும் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நள்ளிரவு 01.15 மணி முதல் அதிகாலை 3 மணிவரை நடைபெற்றது. ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
Next Story
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு இன்று மதியம் 2.30 மணியளவில் பேசின்பிரிட்ஜ் ரயில் பணிமனைக்குச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.